| ‘கண்பனி ஆன்றிக என்றி தோழி’ | | எனவும்- இகவும், | | ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ’ | குறுந். 2 | என- மோவும், | | ‘உரைமதி வாழியோ வலவ’ ‘சென்மதி பெருமநிற் றகைக்குநர் யாரே’ | அகம்.46 | என- மதியும், | | செலீஇயர் அத்தை நின்வெகுளி’ | புறம்.6 | என- அத்தையும், | | ‘வேய்நரல் விடர்அகம் நீஒன்று பாடித்தை’ | கலி.40 | என- இத்தையும், | | ‘காணிய வாழிய மலைச்சாரல்’ | | என- வாழியவும், | | ‘சிறிதுதவிர்ந்து ஈக மாளநின்- பரிசிலர் உய்ம்மார்’ | | என- மாளவும், | | ‘செழுந்தேர் ஓட்டியும் வென்றீ’ | | என- ஈகாரமும், | | ‘நீயே, செய்வினை மருங்கின் செலவு அயர்ந்து யாழநின் கைபுனை வல்வில் நாண்உளர் தீயே’ | கலி. 7 | என- யாழவும், முன்னிலை அசைநிலையாய் வந்தவாறு காண்க. 26 | | ஒத்த நூற்பாக்கள் | | ‘மியாஇக மோமதி இகும்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல்.’ | தொல்.சொல்.274, | | முழுதும் | நன்.440 | | | ‘இத்தை அத்தை யாழஇக மதிமாளஆர் ‘மோமியா வாழிய முன்னிலைஅசை பத்தே.’ | தொ.வி.137 |
|
|
|