சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-23427

இ-ள்: மா என்ற இடைச்சொல் வியங்கோளைச் சார்ந்து அசைநிலையாய் வரும் என்றவாறு.
 

  எ-டு: ‘புற்கை உண்கமா கொற்கை யோனே’
 
என வரும். சிறுபான்மை,
 
  ‘ஓர்கமா தோழி அவர் தேர்மணிக் குரலே’

 

என முன்னிலை அசைச்சொல்லாயும்,
 
  ‘ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே’

புறம்.193

என முன்னிலை அன்றி அசைச்சொல்லாயும் வருதல் ‘அவ்வச் சொல்லிற்கு’ எனும் பொருள் புறனடையால் கொள்க.
 

ஒத்த நூற்பாக்கள்:
 

  முழுதும்

தொல்.சொல்.273, நன்-439,


முன்னிலை அசைச்சொற்கள்

276. மியா இக மோமதி அத்தை இத்தை
வாழிய மாளஈ யாழமுன் னிலைஅசை.

 

இது முன்னிலை அசைநிலை ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: மியா முதலிய பத்து இடைச்சொல்லும் முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைச்சொல்லாம் என்றவாறு.
 

  வரலாறு: கேண்மியா-
‘சிலையன் செழுந்தழையன் சென்மியா என்று
மலைஅகலான் வாடி வரும்’

 
என மியாவும்,