சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

426 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

‘அம்ம’ இடைச்சொல்

274. அம்மகேட் பித்தலும் அசைநிலையும் ஆகும்.
 
இதுவும் அது.

இ-ள்: அம்ம என்னும் இடைச்சொல் ஒருவனை ஒருவன் ஒன்றுகேள் என்று
கேட்பித்தற்கண் வருதலும் அசைநிலையாய் வருதலும் பொருந்தும் என்றவாறு.
 

  வரலாறு: ‘அம்ம வாழி தோழி’

நற்.158

எனவும்,
 
  ‘செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது
நயம்நின்ற பொருள்கெடப் புரிஅறு நரம்பினும்
பயன்இன்று மன்ற அம்ம காமம்’

கலி.142

எனவும் வரும். மியா-இக-மோ முதலிய அசைநிலைகள் ஒரு பொருள் உணர்த்தா
ஆயினும் முன்னிலைக்கண் அல்லது வாராமையின் அவ்விடம் உணர்விக்குமாறு போல,
அம்ம என்பதூஉம் ஒருபொருள் உணர்த்தாது ஆயினும் ஒன்றனைக் கேட்பிக்கும்
இடத்து அல்லது வாராமையின் அப்பொருள் உணர்விக்கும் என்பது விளக்கிய
‘கேட்பித்தல்’ என்றார். 24
 

விளக்கம்
 

  ‘உரை சேனாவரையர் உரையே பெரும்பான்மையும் ஆகும்.

176


ஒத்த நூற்பாக்கள்
 

  ‘அம்ம கேட்பிக்கும்.’

தொல்.சொல். 266,மு.வீ.ஒ-21

  ‘அம்ம உரையசை கேண்மின்என் றாகும்.’

நன்.438


‘மா’ இடைச்சொல்
 

275. மாஎன் கிளவி வியங்கோள் அசைச்சொல்.
 

இஃது அசைநிலை ஆமாறு கூறுகின்றது.