சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

இடைச்சொல்இயல்-நூற்பா-23425

இ-ள்: அந்திலும் ஆங்கவும் ஆகிய இரண்டு இடைச் சொல்லும் அசைநிலையாம்:
அவற்றுள் அந்தில் இடப்பொருளைக் குறித்து நிற்றற்கும் உரித்து என்றவாறு.
 

  வரலாறு; ‘அந்தில் கச்சினன் கழலினன்’

அகம்.76


 
  ‘ஆங்கக் குயிலும் மயிலும் காட்டிக்
கேள்வனை விடுத்துப் போகி யோளே’

 

எனவும்,
 

  ‘வருமே சேயிழை அந்தில் கொழுநற் காணிய’

குறுந். 293

எனவும் வரும். அசைநிலை எனவும் இடம் எனவும் பொதுப் படக் கூறினாரேனும்,
ஏற்புழிக் கோடலான் ஆங்க அசைநிலை ஆதல் கட்டுரைக்கண் எனவும், அந்தில்
ஆங்கு என்னும் இடப்பொருள் குறித்து வரும் எனவும் கொள்க. 23
 

விளக்கம்
 

தொல்காப்பியனார் ஆங்க உரையசை எனவும், அந்தில் ஆங்கு என்ற
பொருளிலும் அசைநிலையாகவும் வரும் எனவும் குறிப்பிட்டதை உட்கொண்டு,
இவ்வாசிரியர் நூற்பாயாத்தார். நன்னூலார் அந்தில், ஆங்க-என்ற இரண்டும்
அசைநிலையாகவும் இடப் பொருளாகவும் வரும் என்றார்.
 

ஒத்த நூற்பா
 

  ‘அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று
ஆயிரண் டாகும் இயற்கைத்து என்ப.’

தொல்.சொல்.267


 
  ‘ஆங்க உரையசை’

தொல். சொல். 277, மு.வீ.ஒ.21


 
  ‘அந்தில்ஆங்கு அசைநிலை இடப்பொரு ளவ்வே.’

நன்.437,மு.வீ.ஒ.14