சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

424 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  வரலாறு:
‘முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்’

புறம்.73

என்புழி, அரசுகொடுத்தல் எளிது என எளிமைப் பொருள் உணர்த்தியவாறு காண்க.
 

ஒத்த நூற்பா
 

  முழுதும்

தொல்.சொல். 266,மு.வீ.ஒ.13


இசைநிறை இடைச்சொற்கள்
 

272. ஒடுவும் தெய்யவும் இசைநிறை மொழியே
 


இஃது இசைநிறை ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: ஒடு என்பதும் தெய்ய என்பதும் இசைநிறை இடைச்சொல்லாம் என்றவாறு.
 

  வரலாறு:
‘முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக்குறு வட்டி போதொடு பொதுள’

குறுந்.155

எனவும்,
 

  சொல்லேன் தெய்ய நின்னொடு பெயர்ந்தே’
 

எனவும் வரும்.
 

விளக்கம்
 

போதொடு என்பது போது என்ற பொருளே தருவது.
 

ஒத்த நூற்பா
 

  முழுதும்

நன்.436


‘அந்தில்’, ‘ஆங்க’- இடைச்சொற்கள்
 

273. அந்தில் ஆங்க அசைநிலை அவற்றுள்
அந்தில் இடப்பொருட்டு ஆகலும் உரித்தே.

 


இஃது அசைநிலை ஆமாறும் பொருள்படுமாறும் கூறுகின்றது.