| ‘பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்’ | அகம்.14 | எனவும், | | ‘கயிறுஇடு கதச்சேப் போல மதமிக்கு | அகம்.36 | எனவும், மதவு என்னும் உரிச்சொல் மடனும் வலியும் ஆகிய குறிப்பு உணர்த்தலே அன்றி | | ‘மதவிடை’ | | எனவும் | | ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ | அகம்.130 | எனவும், உள்ள மிகுதியும் வனப்பும் ஆகிய குறிப்பும் சிறு பான்மை உணர்த்தலும், | | கடி என்னும் உரிச்சொல் ‘கடிய கடிந்துஒரார் செய்தார்க்கு’ | குறள்.658 | என வரைவும், | | ‘கடிநுனைப்பகழி’ | | எனக் கூர்மையும், | | ‘கடிமரம் தடியும் ஓசை’ | புறம்.36 | எனக் காவலும், | | ‘கடியூண் கடவுட்கு இட்ட செழுங்குரல்’ | குறுந்.105 | எனப் புதுமையும், | | ‘கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்’ | புறம்.15 | எனவிரைவும், | | ‘கடும்பகல் ஞாயிறு’ | கலி.145 | என விளக்கமும், | | ‘கடுங்கால் ஒற்றலின் சுடர்சிறந்து உருத்து’ | பதிற்.25 | என மிகுதியும், |
|
|
|