சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-4461

  இ-ள்: ‘குருமணித்தாலி’
 
எனவும்
 
  ‘நறுஞ்சாந்து புலர்ந்த கேழ்கிளர் அகலம்’ மதுரைக். 493
எனவும் குருவும் கெழுவும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் நிறன் என்னும் பண்பு உணர்த்தலும்,
 
  ‘நொசிபடு மருங்குல் கசிபடக் கைதொழா’
 
எனவும்,
 
  ‘இழைமருங்கு அறியா நுழைநூல் கலிங்கம்’ மலைபடு.561
எனவும்
 
  ‘நுணங்குதுகில் நுடக்கம் போல’ நற்.15
எனவும் நொசிவும் நுழைவும் நுணங்கும் ஆகிய மூன்றும் நுண்மை ஆகியபண்பு
உணர்த்தலும் பொருந்தும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. 4
 

விளக்கம்
 

நன்னூலார் உரியியலில் உயிர்ப் பொருள்களின் குணப் பண்பு அவற்றிற்கு உரிய
தொழிற்பண்பு என்பனவற்றை விளக்கியுள்ளார்; உயிரல் பொருள்கள் உணர்தல்
தன்மைய அன்மையின் அவற்றிற்குத் தம்வயத்தனவாகத் தாம் அறிந்து செய்யும்
தொழில் இல்லை என்று கொண்டு அவற்றின் குணப்பண்பை விளக்கினார்; பின் உயிர்ப்
பொருள் உயிரல் பொருள் இரண்டற்கும் பொதுவாகக் காணப்படும்
தொழிற்பண்புகளையும் விளக்கியுள்ளார்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘குருவும் கெழுவும் நிறன் ஆ கும்மே.’ தொல்.சொல்.301
  ‘நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை.’ 374
  ‘அறிவுஅருள் ஆசை அச்சம் மானம்
நிறைபொறை ஓர்ப்புக் கடைப்பிடி மையல்