| ‘விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்’. ‘நனவே களனும் அகலமும் செய்யும்.’ | 353 |
| ‘மதவே மடனும் வலியும் ஆகும்.’ | 376 |
| ‘மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே’. | 378 |
| ‘கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரையே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம்முன் றேற்று ஆயீ ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே.’ | 383 |
| ‘ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே’. | 384 |
| ‘விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு வரைவு புதுமையுடன் கூர்மை- புரைதீர் கரிப்பையம் காப்பச்சம் தோற்றமீ ராறும் தெரிக்கின் கடிச்சொல் திறம்’. | நே.சொல்.58 |
| ‘கடியென் கிளவி காப்பே கூர்மை விரையே விளக்கம் அச்சம் சிறப்பே விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல் வரைவே மன்றல் கரிப்பின் ஆகம்.’ | நன்.477 |
| ‘கடியென் கிளவி காப்பே கூர்மை விரைவே விளக்கம் மிகுதிப் பொருள.’ | மு.வீ.ஒ.46 |
பண்புணர்த்தும் உரிச்சொற்கள் (283,284) தாம்பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்துவன:
|
283. | குருவும் கெழுவும் நிறன்ஆ குதலும் நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மைப் பொருள ஆதலும் பொருந்தும் என்ப. | |
இது நிறுத்த முறையானே பண்பு உணர்த்துவனவற்றுள், தாம்பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்தும் உரிச் சொற்கள் இவை என்கின்றது. |