இது பண்பு உணர்த்துவனவற்றுள், தாம் ஒன்றாகின்று பலபொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்கின்றது. | | இ-ள்: ‘வார்ந்து இலங்குவைஎயிற்றுச் சின்மொழி அரிவையை’ | குறுந்.14 | எனவும், | | ‘தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை’ | அகம்.34 | எனவும், | | ‘போகுகொடி மருங்குல்’ | | எனவும், | | ‘திரிகாய் விடத்தரொடு கார்உடை போகி’ | பதிற்.13 | எனவும், | | ‘ஒழுகுகொடி மருங்குல்’ | | எனவும், | | ‘மால்வரை ஒழுகியவாழை’ | சிறுபாண்.21 | எனவும், வார்தலும் போகலும் ஒழுகலும் ஆகிய உரிச்சொற்கள் நேர்மையும் நெடுமையும் ஆகிய பண்பு உணர்த்தலும், | | ‘வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்’ | புறம்.394 | எனவும், | | ‘தடமருப்பு எருமை’ | நற்.120 | எனவும் தட என்னும் உரிச்சொல் பெருமையும் கோட்டமும் ஆகிய பண்பு உணர்த்தலும், | | ‘இரும்பிடி கன்றொடு விரைஇக் கயவாய்ப் பெருங்கை யானை’ | அகம்.118 | எனவும், |
|
|
|