சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

464 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘கயந்தலை மடப்பிடி’ நற்.137
எனவும் கய என்னும் உரிச்சொல் பெருமையும் மென்மையும் ஆகிய பண்பு
உணர்த்தலும்,
 
  ‘நளிமலை நாடன்’ புறம்.150
எனவும்
 
  ‘சிலைப்பு வல்லேற்றின் தலைக்கை தந்துநீ
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி’
பதிற்.52
எனவும்

நளி என்னும் உரிச்சொல் பெருமையும் செறிவும் ஆகிய பண்பு உணர்த்தலும் இயல்பு என்று சொல்லுவர், இலக்கணங்களை அறிந்தோர் என்றவாறு.


ஒத்த நூற்பாக்கள்
 

  ‘வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்
நேர்வும் நெடுமையும் செய்யும் பொருள.’
தொல்.சொல்.317

 
  ‘தடவும் கயவும் நளியும் பெருமை.’ 320மு.வீ.ஒ.40

 
  ‘அவற்றுள்
தடஎன் கிளவி கோட்டமும் செய்யும்’.
தொல்.சொல்.321

 
  ‘கயஎன் கிளவி மென்மையும் ஆகும்.’ 322
  ‘நளிஎன் கிளவி செறிவும் ஆகும்.’ 323
  ‘நளி செறிவாம்’ நே.சொல்.59


இசையுணர்த்தும் உரிச்சொற்கள் (285,286)
தாம்பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்துவன:
 

285 கம்பலை சும்மை அரவம் கண்ணலும்
துவைத்தல் சிலைத்தல் இயம்பல்இசை சுட்டலும்
உரிய என்மனார் உணர்ந்திசி னோரே.