இது நிறுத்த முறையானே இசை உணர்த்துவனவற்றுள் தாம்பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்கின்றது. |
| இ-ள் ‘களிறுகவர் கம்பலைபோல’ | அகம்.96 |
எனவும் |
| தளிமழை தோயும் தண்பரங் குன்றின் கலிகொள் சும்மை ஒலிகொள் ஆயம் மதுரைக். | 263-4 |
எனவும் கம்பலையும் சும்மையும் ஆகிய இரண்டு உரிச்சொற்களும் அரவம் ஆகிய இசைப் பொருண்மையை உணர்த்தலும், |
| ‘முரசுகடிப்பு இகுப்பவும்’ | புறம்.158 |
எனவும், |
| ‘ஆமான் நல்லேறு சிலைப்ப’ | முருகு.315 |
எனவும், |
| ‘கடிமரம் தடியும் ஓசை தன்னூர் நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப’ | புறம்.36 |
எனவும் துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் ஆகிய உரிச் சொற்கள் மூன்றும் இசைஎன்னும் அசைப் பொருண்மை உணர்த்தலும் உரிய என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு. |
| | |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘கம்பலை சும்மை கலியே அமுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள.’ | தொல்.சொல்.349 |
|
| ‘துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் இசைப்பொருட் கிளவி என்மனார் புலவர்’ | 358 |