சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-7467

கலி என்னும் உரிச்சொல் அரவம் ஆகிய இசைப் பொருண்மையும் செருக்கு ஆகிய குறிப்புப் பொருண்மையும் உணர்த்தலையும்,
 

  ‘உயவுப்புணர்ந் தன்றுஇவ் வழுங்கல் ஊரே’ நற்.203
எனவும்,
 
  ‘பழங்கண் ணோட்டமும் நலிய
அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே’
அகம்.66
எனவும்,
 
  ‘குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்ற கூறும் சிறியவர்கட்கு.’
நாலடி.353
எனவும் அழுங்கல் என்னும் உரிச்சொல் அரவம் ஆகிய இசைப் பொருண்மையும்
இரக்கமும் கேடும் ஆகிய குறிப்பும் பொருண்மையும் உணர்த்தலும்,
 
  ‘ஏறுஇரங்கு இருளிடை இரவினில் பதம்பெறான்’ கலி.46
எனவும்,
 
  ‘செய்து இரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்’ புறம்.10

எனவும் இரங்கல் என்னும் உரிச்சொல் இசைப்பொருளும் ஒரு பொருளது கழிவால்
பிறந்த வருத்தம் ஆகிய குறிப்புப் பொருளும் உணர்த்தலும் பொருந்தும் என்று கூறுவர்
அறிந்தோர் என்றவாறு.

இசை அன்றிக் குறிப்பு உணர்த்தினும் பலபொருட்டு முதல் பற்றிக் குறிப்பும்
உடன் ஓதினார். 7
 

விளக்கம்
 

ஒத்த நூற்பாக்கள் முன்னர்க் காட்டப்பட்டனவற்றுள் காண்க.