எனவும் வருவன போல்வன. பிறவும் அன்ன. எழுத்துப் பிரிந்து இசைத்தன: நடந்தான்- நடந்தாள்- என்பன போலும் வினைச்சொல்லும், தமன்- தமள்- என்பன போலும் ஒட்டுப்பெயரும் ஆம். அவை முறையே வினையியலுள்ளும், பெயரியலுள்ளும் கூறிப்போந்தன. பிரிதலும் பிரியாமையும் தாமாகப் பொருள் உணர்த்துவனவற்றிற்கே ஆகலின், கூறை கோட்படுதல் கடவுளர்க்கு எய்தாதவாறு போல இடைச்சொற்கு இவ்வாராய்ச்சி எய்தாமை அறிக. தவ-நனி-என்னும் தொடக்கத்தன குறிப்பு வினையெச்சம் போலப் பொருள் உணர்த்தலின் அவைபோலப் பிரிக்கப்படும் கொல்லோ என ஐயுறாமையை அமைத்து அகற்றியவாறு இச்சூத்திரத்திற்குக் கருத்தாதல் அறிக. 10 |