சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-6529

  ‘நில்லாது பெயர்ந்த பல்லோர் உள்ளும்
என்னையே குறித்த நோக்கமொடு’

அகம்.110

எனவும் இவைதன்மை படர்க்கை தழீஇயின.
 
  ‘எம்பியு ஈங்குப் பெற்றேன் என்எனக்கு அரியது என்றான்’ சிந்.1760

இது முன்னிலை படர்க்கை தழீஇயிற்று.
                    அங்ஙனம் சொல்லப்படுவானோ பெருஞ்சாத்தன் தந்தை-
                    அங்ஙனம் சொல்லப்படுவாளோ பெருஞ்சாத்தன் தாய்- எனத்தம்மைப் பிறர்போலக் கூறும் கருத்தினால் கூறப்படும் படர்க்கைச்சொற்கள் தன்மை தழுவுதலும்,

நீயோ அவனோ யார்இது செய்தார்-
                    யானோ அவனோ யார்இது செய்தார்-
                    யானோ நீயோ யார்இது செய்தார்-
                    அவனோ நீயோ யானோ யார்இது செய்தார்- எனவிரவி- இடம் பிற இடம் தழுவுதலும் ஈண்டே அமைத்துக் கொள்க. பிறவும் அன்ன. 6
 

விளக்கம்

வேறோர் ஆறு - சான்றோர் செய்யுளொடும் வழக்கோடும் பட்டநிலை.

அஃதை திக்கற்றவர்; திக்கற்றவருக்குச் சோழ மன்னர் ஒவ்வொருவரும் தந்தை
நிலையில் உதவுபவர் ஆதலின் தந்தை என்ற ஒருமைச் சொல் சோழ மன்னருள்
ஒவ்வொருவருக்கும் உரித்தாம் நிலையில் வழுவமைதியாம்.

இளையர் ஒவ்வொருவருக்கும் தாய் என்ற சொல் தனித்தனியே சென்று
பொருந்துதலின் வழுவமைதியாம். இச்செய்திகள்.