சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

528 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘இரும்பேர் ஒக்கலொடு பதம்மிகப் பெருகுவிர்’ 157

என்னும் பன்மையொடு முடிவதூஉம் ஈண்டு இதனானே அமைத்துக்கொள்க.

இன்னும் இதனானே, நம்பிமார் வந்தார்- நங்கைமார் வந்தார்- அன்னைமார்
வந்தார்- எனவும்,

நங்கைமீர் கேண்மின்- பாவைமீர் கேண்மின்- அன்னைமீர் கேண்மின்- எனவும்
ஒருமைப் பெயர் அடுத்து நின்று மார் ஈறும் மீர் ஈறும் பன்மை உணர்த்துதலும் கொள்க.

யான் எம்ஊர் புகுவன்- நீ நும்ஊர் புகுவை- என்பன போல்வன யான் புகுவன்- நீ
புகுவை- என ஒருமையொடு முடிந்து நிற்ப, எம் ஊர்- நும் ஊர்- என்பன வேறுஒரு
முடியாய் நிற்றலின் வழாநிலையாம்.
 

  ‘மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்’ குறள்.87

என்புழி, மராஅத்த கடவுள் என்பது பகுதிப்பொருள் விகுதி பெற்றுநின்றது.
இவைபோல்வன அன்றி முன்னர்க் காட்டிய உதாரணங்கள் போல மயங்கி வருவன
உளவேல் அவற்றையும் இச்சூத்திரத்தானே அமைத்துக்கொள்க.
 
  ‘என்நீர் அறியாதீர் போல இவை கூறல்
நின்நீர அல்ல நெடுந்தகாய்’

கலி.6
எனவும்,
 
  ‘இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றுஐய’ கலி.2
எனவும் வருவன போல்வன எல்லாம் மேலைச்சூத்திரத்தானே அமையும்.
 
  ‘சாத்தன்தாய் இவை செய்வலோ’
 
எனவும்,
 
  ‘கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
ஒல்வேன் அல்லனது வாயா குதலே’

புறநா.346
எனவும்,