தந்தையர் முறையர் ஆதலின் தந்தை என்னும் ஒருமை சோழர் என்னும் பன்மையொடு தனித்தனிச் சென்று கூடுதலானும், ஒருவற்கு ஒருத்தி தாயாம் தன்மையான் இளையர் என்னும் பன்மை தாய் என்னும் ஒருமையொடு தனித்தனிச் சென்று கூடுதலானும், அமைக்க என அமைத்தவாறு என்பதாம்.நீர் பாந்தன- பால் சுரந்தன- எனவும், சோறு மாண்டது. படை வந்தது- கண் சிவந்தது- முலை வீங்கிற்று- |
| ‘இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது’ ‘உள்ளியது எல்லாம் உடன் எய்தும்’ | குறள்.1091 குறள்,309 |
காடெல்லாம் வாழ்ந்தது- ஊர் எல்லாம் வாழ்ந்தது- எனவும் அஃறிணைக்கண் மயங்கி வருவனவும் கொள்க.எல்லாம் என்பது ‘மேனி எல்லாம் பசலை ஆயிற்று’ என்பதுபோல எஞ்சாப் பொருட்டு ஆயதோர் உரிச்சொல்லாய் நிற்பின் வழாநிலையாம்.
இனி, இரண்டனுள் கூர்ங்கோட்ட காட்டுவல்’
என்புழி, இரண்டனுள் ஒன்றை வகுத்தமையால் கூர்ங் கோட்டது. என ஒருமை ஆகற்பாலது ‘கோட்ட’ எனப் பன்மையாய் நிற்றலும், |
| ‘முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும்’ | தொல்.சொல்.462 |
என்பதனால், கூத்தர் ஆற்றுப்படையுள், |
| ‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ’ | 50 |
என்புழித் ‘தலைவ’ என்கின்ற ஒருமைச்சொல் முடிவுழி |