சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

526 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்


 
  ‘உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்
இழிப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே.’

‘ஆண்மை குடிமை அடிமை மூப்பே
விருந்தே இளமை பெண்மை உறுப்பே
குழுவே வன்மை குருடே மகவே
பரசே காதல் அஃறிணை முடிபின.’
‘உயிரே காலம் உலகே உடம்பே
தெய்வம் பூதம் திங்கள் வினையே
ஞாயிறு பிறவும் அவற்றோ ரன்ன.’

‘உயர்திணை முடிபா தலுமுரித் தாகும்.’

‘ஒருவரை உரைக்கும் பன்மைக் கிளவியும்
ஒன்றனை உரைக்கும் பன்மைக் கிளவியும்
வழக்கினுள் உரைத்தல் வழுவா காவே.’

நன்.379




மு.வீ.ஒ.88


89

90



63


பால் இட வழுமைதி
 

300. ஒருமை பன்மையும் பன்மை ஒருமையும்
ஓர்இடம் பிறஇடம் தழுவலும் உளவே.

 

இது முற்கூறிய உவப்பு முதலியவற்றான் அன்றி வேறோர் ஆற்றான் பால் வழுவும் இடவழுவும் அமைக்கின்றது.

இ-ள்: ஒருமைச்சொல் பன்மையும் பன்மைச்சொல் ஒருமையும் ஓர் இடத்திற்கு
உரிய சொல் பிறஇடமும் தழுவி நிற்றலும் உள; அவ்விடங்கள் அறிந்து
அமைத்துக்கொள்க என்றவாறு.
 

  ‘அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்’ (அகம்.96)
எனவும்,
 
  ‘ஏவல் இளையர் தாய்வயிறு கரிப்ப’
 

எனவும் முறையே ஒருமைச் சொல் பன்மை தழுவியும், பன்மைச்சொல் ஒருமை தழுவியும் வந்தன. அங்ஙனம் வருதல் எழுவாயினும் சோழர் எல்லாரும் அஃதைக்குத்