சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-5525

அமைதி
 

இந்நூற்பாவில் வேள் குரிசில் என்பன அஃறிணை வாசகம் என்று வழுவமைத்தமை
பண்டையார் கொள்கையை உட்கொண்டதாம். ‘நம்பி ஆடூஉ விடலை கோவேள் குரிசில்’
என்பன உயர்திணைப் பெயர்கள் ஆதல் புதியன கோடலாகிய பின்னவர் கொள்கையை
ஏற்றுச்சென்றதாம் கொள்க.

குடிமை ஆண்மை முதலியன உயர்திணை முடிபும் கொள்ளும் என்றே பண்டைய
உரையாசிரியர் பலரும் கூறியது பொருந்தாது என்று காரணமின்றி முனிவர் கூறும்
கூற்றுப் பொருளுரை அன்று என்பது வெளிப்படை. நூற்பாக்களின் அமைப்பை
நோக்கின் பண்டையார் உரையே ஏற்புடைத்து என்பது தெளிவாகும்.

‘நின்றாங்கு இசைத்தல் இவண்இயல் பின்றே’

என்ற நூற்பாவில் ‘இவண்’ என்ற சொல் நிலையையும் நோக்குக.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘ஒருவரை ...............அல்ல.’
‘குடிமை ..........கிளந்தாங்கு இயலும்.’
‘காலம்........உயர்திணை மேன.’
‘நின்றாங்கு...............இன்றே.’
‘இசைத்தலும் உரிய வேறிடத் தான.’
‘உயர்வும் இழிவும் உவப்பும் சிறப்பும்
அயர்வில் திணைபால் மயங்கும்.’

‘குடிஅடிமை வேந்து குழவி விருந்து
வழுவுறுப்புத் திங்கள் மகவும்- பழுதில்
உயர்திணைப் பண்போ டுயிருறுப்பு மெய்யும்
அயர்வில் அஃறிணையே யாம்.’
தொல்.சொல்.27
56
57
58
59

நே.சொல்.11




9