| ‘காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம் பால்பிரிந்து இசையா உயர்திணை மேன’ | தொல்.சொல்.57 |
என்பனவற்றையும் கொண்டமை உணரத்தக்கது. |
சூறாவளி |
வேள் குரிசில் என்பன அஃறிணை வாசகம் என ஈண்டு வழு அமைத்தார். மேல் பெயரியலுள் ‘நம்பி ஆடூஉ விடலை கோவேள் குரிசில்’ என உயர்திணை ஆண்பால் பெயருள் எடுத்தோதியதனை மறந்தார் போலும். குடிமை நல்லன்- ஆண்மை நல்லன்- என ஈறும் திரியாது நின்றாங்கு நின்று குடிமை ஆண்மை முதலியன உயர்திணை முடிபுகொள்ளும் எனவும். அது வழா நிலையாம் எனவும் கூறினார். ஆசிரியர் தொல்காப்பியனார். |
| ‘உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும் அஃறிணை மருங்கின் கிளத்தாங்கு இயலும்’ | சொல்.55 |
என்றதனால், அவை உயர்திணை முடிபு கொள்ளா என விலக் கப்பட்டமையானும், குடிமை நல்லன் ஆண்மை நல்லன் முதலிய வாய்பாடு இருவகை வழக்கினும் இன்மையானும் அதுபொருந்தாது என மறுக்க. |
| ‘நின்றாங்கு இசைத்தல் இவண்இயல்பு இன்றே’ ‘இசைத்தலும் உரிய வேறிடத் தான’ | 58 59 |
என்னும் சூத்திரங்கட்குப் பொருள் அறியாது உரையாசிரியரை உள்ளிட்டோர் எல்லாம். |
| ‘அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்’ | 59 |
என்பதனொடு மாறுகொள்ள உரைத்தார். அதுபொருத்தாமை அறிக. இவ்வாறு இன்னும் எடுத்து விரிப்பின் பெருகும். ஆங்காங்கு உய்த்து உணர்க. |