சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-2523

உவத்தல் என்ற கருத்தான் உலகம் என்பதும், பூத்தல் என்ற கருத்தான் பூதம்
என்பதும், உல, - பூ- என்ற வேர்ச் சொற்களினின்று முறையே தோன்றின என்பதே
அறிஞர் முடிவு.

குடிமை முதலாயின குடிமை நன்று குடிமை நல்லன் என இருதிணை வினை
கோடலும். காலம் முதலாயின காலன் என்றாற்போல ஈறுதிரிந்தவழியே உயர்திணை
வினை கோடலும் வழாநிலையாதலின் அவை வழுவமைக்கப்படுவன அல்ல என்றார்.
இக்கருத்து.
 

  ‘நின்றாங்கு இசைத்தல் இவண்இயல் பின்றே’
‘இசைத்தலும் உரிய வேறிடத் தான’
தொல்.சொல்.58
59

    என்ற தொல்காப்பியச் சொற்படல நூற்பாக்களையும், அவற்றிற்குச் சேனாவரையர்
நச்சினார்க்கினியர் என்பார் உரைத்த உரைகளையும் உட்கொண்டு கூறப்பட்டதாம்.

நன்னூல் நூற்பாவினைக்கொண்ட இவ்வாசிரியர் சொல் நோக்கினும்’ என்ற
தொடரை மிகுதியாக அமைத்து,
 

  ‘குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை அரசே மகவே குழவி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொல் என்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்’
தொல்.சொல்.56