கூர்ங்கோட்டது என்பதனைக் கூர்ங்கோட்ட எனப் பன்மையாற் கூறும் வழுவமைதியும் அவர் ‘ஒருமைசுட்டிய’ என்ற நூற்பாவுரையுள் குறிப்பிட்டுள்ளார். ஒருமைப்பெயர்ஈறும் மீர்ஈறும் அடுத்துப் பன்மை உணர்த்துதலும் யான் எம்ஊர் புகுவன் முதலிய தொடர்களும், |
| ‘மன்ற மரா அத்த பேம்முதிர் கடவுள்’ | |
என்ற தொடரும் போல்வன அந்நூற்பா உரையுள் அவர் காட்டியனவே.சுற்றத்தலைவனைச் சுற்றத்தாரோடு ஆற்றுப்படுத்தற்கண் ஒருமைப் பெயர் பன்மையொடு முடிதல் ஆகிய ‘முன்னிலை சுட்டிய’ தொல்.சொல். 462 என்ற தொல்காப்பிய நூற்பாச் செய்தியை ஈண்டே அடக்குதல் மயிலைநாதர் கருத்தாகும். (நன்,379) ‘ஒருமை சுட்டிய’ என்ற தொல்காப்பிய நூற்பா உரையுள் நச்சினார்க்கினியர் காட்டிய |
| ‘என்நீர் அறியாதீர் போல இவைகூறல், நின்நீர அல்ல நெடுந்தகாய்’ | |
என்பதனையும், |
| ‘இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைய’ | |
என்பதனையும் இவர் ‘உவப்பினும் உயர்வினும்’ (299) என்ற நூற்பாவால் கொள்க என்றார்.ஒல்வேன் என்னும் தன்மைச் சொல் சிறாஅன் என்னும் படர்க்கைச் சொல்லொடும், பல்லேமுள்ளும் எனற்பாலது பல்லோருள்ளும் என்றும் மயங்கிய தன்மைப் படர்க்கை வழுவமைதி கொள்க. இதனைச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் அதிகாரப் புறனடையாற் கொண்டனர். யான் இவை செய்வலோ என்று கூறவேண்டிய விடத்துச் சாத்தன் தாய் இவை செய்வலோ என்பதும் அது. |