சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

68 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 ‘ஈகார இறுபெயர் இகரமாம் என்ப’.
‘ரவ்விற்கு அம்முதல் ஆம்முக் குறிலும்
மொழிமுதல் ஆகி முன்வரப் பெறுமே’.
‘இஉ லகரம்முன் எதிர்தரும் என்ப’.
‘யகரக்கு இகரமும் ஆகிமுன் வருமே’.
‘இணைந்தியல் காலை யரலக்கு இகரமும்
மவ்வக்கு உகரமும் நகரக்கு அகரமும்
மிசைவரும் ரவ்வழி உவ்வும் ஆம்பிற’.
‘சங்கதம் பாகதம் சநுக்கிர கம்அவப்
பிரஞ்சனம் நான்குஎனப் பேசும் கிளவி’.
‘சங்கதம் சநுக்கிரகம் தருநிலத் தவர்உரை’.
‘அபப்பிரஞ் சனம்சே தனர்மொழி ஆகும்’.
‘எல்லா நாட்டினும் இயல்வது பாகதம்’.
‘தற்பவம் தேசிகம் தற்சமம் எனப்படும்’.
‘ஆரியச் சிறப்பெழுத் தால்பொதுச் சிறப்பால்
ஆனஈ ரெழுத்தால் அமைவது தற்பவம்.’
‘தேசிகம் என்பது திசைச்சொல் ஆகும்.’
‘ஆரியம் தமிழ்பொது ஆமொழி தற்சமம்.’
‘சந்தி தீர்க்கம் குணமே விருத்தி
எனமூ வகைப்படும் என்மனார் புலவர்.’
‘அஆ இறுதிமுன் அஆ வரினே
இருமையும் கெடஆ ஏற்கும் என்ப.’
‘இஈ இறுதிமுன் இஈ வரினே
இருமையும் கெடஈ ஏற்கும் என்ப.’
‘உஊ இறுதிமுன் உஊ வரினே
இருமையும் கெடஊ ஏற்கும் என்ப.’
‘அஆ இறுதிமுன் இஈ வரினே
இருமையும் கெடஏ ஏற்கும் என்ப.’
‘அஆ இறுதிமுன் உஊ வரினே
இருமையும் கெடஓ எய்தும் என்ப.’
‘அஆ இறுதிமுன் ஏஐ வரினே
இருமையும் கெடஐ எய்தும் என்ப.’
மு.வீ.மொ. 21

22
23
24


25

26
27
28
29
30

31
32
33

34

35

36

37

38

39

40