சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-1767

 இதுமூ வகைத்தாய் வடமொழி திரிவன
தற்பவம் பிறவும் பொதுமை தற்சமம்
சிறந்ததொன்றற் குரியன தேசிகம் என்ப.’

‘உறுப்புச் செய்யுள் என்று உரைப்ப தற்பவச்
சிறப்புரை விரவிச் செப்பிய செய்யுளே.”’

‘வடநடைப் பகுபதம் வருமொழி முதற்கண்
இஎஎன ஐஒளவும் உஓஎன ஒளவும்
அவ்வென ஆவுமாம் ஐயின் ஈறுபோய்
எயன்நீட் டின்ற எச்சமாம் உளபிற’. ”

‘எதிர்மறைப் பகுபதத்து இயைந்த மொழிமுதல்
ஒற்றெனின் அவ்வும் உயிரெனின் அந்-னும்
இருமைக்கு ஆம்நிரு எனவட நடையே’. ”


தொ.வி. 191


192




86



87
 

இனி முத்துவீரிய நூலார் வடமொழியாக்கத்தையும் தமிழிற்காணும் வடமொழிப்
புணர்ச்சியினையும் விரிவாகக் குறிப்பிடுகின்றார்;
 

 ‘இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா உயிர்பொது ஆமென மொழிப.’

‘ஏழாம் உயிரிய்யும் இருவு மாகும்’.
‘ஐந்து வருக்கத்து ஆதியும் அந்தமும்
யரல வளக்களும் பொதுஎழுத் தாகும்’.
‘ஏனைய எழுத்துக்கள் எல்லாம் திரியும்’.
‘எட்டாம் மெய்யே யகார மாகும்.’
‘ஆறைந் தாம்மெய் சயவா கும்மே’.
‘ஒருமுப் பானொன்று உடல்சட வாகும்’.
‘ஆறைந் திரண்டுஉடல் ஆகும் சதவே’.
‘ஆகும்முப் பான்மூன்று ஆக்கை அகவே’.
‘ஐந்துதலை யிட்டஆ றைந்திரு கவ்வே.’
‘ஆகார இறுபெயர் ஐகாரம் ஆகும்’.


மு.வீ.மொ. 10
11

12
13
14
15
16
17
18
19
20