சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

66 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இலக்கணக்கொத்துடையார்,
 
‘வடநூல் வழகில வாதே தமிழைத்
தனியே நீர்தராத் தன்மை என்னெனின்
இலக்கணம் இலக்கியம் ஏது நுட்பம்
சாத்திரம் சூத்திரம் தந்திர உத்தி
பகுதி விகதி பதமே பதார்த்தம்
ஆதி அந்தம் அகாரம் உகாரம்
உதாரணம் மாத்திரை உவமை உருவகம்
விகற்பம் சந்தி விதிஅலங் காரம்
காலம் இலேசம் காரகம் ஞாபகம்
விசேடணம் விசேடியம் விகாரம் அதிகாரம்
குணம்குணி ஆதியாம் சொற்கோள் அன்றியும்
பிறிதின் இயைபு இன்மை நீக்குதல் பிறிதின்
இயைபு நீக்குதல் என்னும் இலக்கணம்
முதலாப் பலவா மொழிபெயர்த் தனவும்
கொண்டனர் பண்டையோர் உண்டோ இன்றோ,       இ.கொ.7
 
முதலிய பல செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.
 

பிரயோக விவேகநூலார் தீர்க்கசந்தி குணசந்தி விருத்திசந்திகளை,

‘சுட்டெழுத்து ஆதிஅந் தம்பத மாகத் தொகைஅவற்றின் நெட்டெழுத்து ஒன்றல்
சவன்னத்தின் நீட்சியின் நீட்சிதலைப்பட்டுமற்றோர் அச்சு இயைந்தால் குணம்முற்
பதம்திரியக் கட்டழித்து அந்தம் புணர்ந்தால் விருத்தி கனங் குழையே, என்று
விளக்கினார். பி.வி.28

தொன்னூல் விளக்கம் சொல்பற்றிப்பின் வருமாறு தொகுத்துணர்த்துகிறது:
 

 ‘சொல்லெனப் படுவதன் தொகுதிநான்கு அவற்றுள்
சநுக்கிரகம் சங்கதம் தேவர் மொழியே
அவப்பிரஞ் சனம்மொழி யாம்இழி சனர்க்கே
ஒவ்வொரு நாட்டிடை உரைப்பது பாகதம்