வீர சோழிய நூலார் சந்திப்படலத்தில்,
ஆன்றாம் உலோபத்தொடு ஆகமம் ஆதேசம் ஆரியத்துள் மூன்றாம் மொழியொடு எழுத்து விகாரம் முதல் நடுஈறு ஏன்றாம் வகைஒன்பது ஆகலும் உண்டுஅவை எவ்விடத்தும் தோன்றா உலகத்தவர்க்குஒத்த போது அன்றித்தூமொழியே’. வீ.சோ. 10
‘ஆவும் அகரக்கு இகரத்துக்கு ஐயும் ஒளவும்உகரக்கு ஏவும் இருவினுக்கு ஆரும் விருத்தி எழில்உகரக்கு ஓவும் இகரத்திற்கு ஏயும் குணமென்று உரைப்பவந்து தாவும் இவைதத்தி தத்தினும் தாதுப் பெயரினுமே’. 12
சொன்ன மொழிப்பொருள் நீக்கும் நகரம்அச்சொல்முன் மெய்யேல் அந்நிலை யாக உடல்கெடும் ஆவிமுன் னாகில்அது தன்னிலை மாற்றிடும் ஒஓ இரண்டும் தனிமொழிமுன் மன்னிய ஐஒளவும் ஆகும் வடமொழி வாசகத்தே’. 11 எனவும் கூறினர். அவர் வடமொழியை ஒட்டிச்சொல்லும் செய்திகளை இயைபுபற்றி அவ்வவ்விடத்தே காண்பாம். இனி, நேமிநாத நூலார் ‘அகரத்திற் காவும் இகரத்திற் கையும் உகரத்திற் கோவும் இருவிற்- ககல்வரிய ஆருமாம் ஏயாம் இகரத்திற் கோவாகிச் சேரும் உகரத்தின் திறம்’ நே.எ- 10 எனவும், ‘நேர்ந்த மொழிப்பொருளை நீக்க வரும்நகரம் சார்ந்தது உடலாயின் தன்உடல்போம்-சார்ந்தது தான் ஆவியேல் தன்ஆவி முன்னாகும் ஐஒள ஆம் மேவிய ஏஓவும் விரைந்து’. நே.எ.11 எனவும் குறிப்பிட்டுள்ளார். |