அவை பாகத்தில் நட்டம் எனவும் கண்ணன் எனவும் உள்ளன. அங்கிருந்து இவை தமிழில் கொள்ளப்பட்டன என்று பண்டைத்தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூற்றை உட்கொண்டு இவரும் சொற்றார்.இனி, ஆரியச்சொல் வடசொல்லாய்த்திரிந்து வருதல் பற்றியும், அவற்றின் புணர்நிலைபற்றியும் இலக்கண் நூலார் கூறுவனவற்றைச் சுருங்கக்காண்போம். நன்னூலார் பதவியலில் வடமொழியாக்கம் என்ற ஒரு பகுதியை அமைத்துள்ளார். அதன்கண், |