சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

696 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

லான் உணர்த்தப்படுதலின் குறிப்பான் எச்சம் செப்பல் மூன்றற்கும் ஒத்தவாறு அறிக.

‘சொல்அளவு அல்லது எஞ்சுதல் இன்றே’ (351) என்பதனான் சொல்லெச்சம் ஒரு
சொல் ஆதல் பெறப்படுதலின் இவை தொடர்ச்சொல்லாம் என்பது பெற்றாம். இசைப்
பொருள் முதலிய குறிப்புப் பொருளைத் தும்முச் செறுத்தல் முதலிய தொடர்மொழிகளே
உணர்த்தலான் எஞ்சுபொருள் எனப்படா ஆயினும், அப்பொருள் பிறசொல்லான்
அல்லது வெளிப்படாமையின் அச்சொல் எச்சமாயின.

இனி, இசையெச்சத்திற்கு ஒல்லென ஒலித்தது- வயிறு மொடுமொடுத்தது-
என்பனவும்,

குறிப்பு எச்சத்திற்கு விண்ணென விணைத்தது- கற்கறிக்க நன்கு அட்டாய்-
என்பனவும் காட்டின் ஆகாது; என்னை? ஒல்லென ஒலித்தது- விண்ணென விணைத்தது-
என இசையும் குறிப்பும் பற்றி வருவனவற்றை எனவென் எச்சம் என அடக்காது வேறு
ஓதின், வெள்ளென வெளுத்தது எனப் பண்பு பற்றி வருவதனையும் வேறு ஓதல்
வேண்டுதலானும், ஒலித்தது விணைத்தது என்பன தம் சொல் எனப்படா, படினும்
ஒல்லென ஓடிற்று- விண்ணென வீங்கிற்று எனப் பிறசொல்லானும் முடிதலின் எஞசு
பொருட்கிளவி இலவாம் என்றல் பொருந்தாமையானும், உண்ண வேண்டா என்பான்
ஒருவன் வயிறு மொடுமொடுத்தது என்றல் உற்றது உரைத்தலாகிய
செப்புவழுவமைதியாகலானும், தீங்கட்டாய் என்பது தொடர்ச்சொல் அன்மையான்
 

 ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்’


குறள்.10
என்புழிச் சேர்ந்தார் என்பதுபோலச் சொல் மாத்திரம் எஞ்சி நிற்கும் சொல்லெச்சம்
ஆவது அல்லது குறிப்பெச்சம் ஆகாமையானும் என்க.