சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பொதுவியல்-நூற்பா-56695

 ‘அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு’ -

குறள்.1154
 
என்றவழியும், முறையானே அதுபோல எனவும், நீத்தார்க்கே தவறு எனவும் வருவன
எஞ்சிய இசைப்பொருளை உணர்த்தலான் இசையெச்சமாம். பிறவும் அன்ன.
 
 ‘உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று’


குறள்.1090
என்புழியும்,
 
 ‘கண்ணூளார் காதல் அவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து’
 

குறள்.1127
என்புழியும் மகிழ்செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும் இவள் குறிப்பு
ஆராய்ந்து அறியாமையின் யான் அது பெற்றிலேன் எனவும், யான் இடையீடு இன்றிக்
காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை எனவும் வந்த தொடர்மொழிகள்
எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை வெளிப்படுத்தலான் குறிப்பெச்சம் ஆயினவாறு
காண்க.
 
 ‘பசப்பித்துச் சென்றாரை உடையையோ அன்ன
நிறத்தையோ பீர மலர்.’

‘இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து’
 




குறள்.879
என்புழியும் முறையானே பசப்பித்துச் சென்றாரை யாம் உடையாம் எனவும், தீயாரைக்
காலத்தால் களைக எனவும் வந்த தொடர்மொழி எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை
வெளிப்படுத்தலான் குறிப்பெச்சமாம். பிறவும் அன்ன.

அதுபோல் என்பதூஉம், தீயாரைக் காலத்தால் களைக என்பதூஉம் அணியியலுள்
எடுத்துக்காட்டுவமம் எனவும், பிறிது மொழிதல் எனவும் கூறப்படுமாறும் உணர்க.

குறிப்புப் பொருளே அன்றி எஞ்சிய பொருளும் சொல்லுவான் குறிப்பொடு படுத்து
உணர்ந்து தமக்கு ஏற்ற சொல்