தென என்னும் ‘வினையெச்சஎன’ வினைகோடல் முற்கூறினார்; ‘எண்எனவும்’ ‘பெயர் எனவும்’ வினைகொள்ளா. இனி, ‘என்றும்’ என்பதனான் என்று என்பதூஉம் என என்பதுபோல நன்றென்று கொண்டான், தீதென்று இகழ்ந்தான் என வினை கொண்டு முடிதல் கொள்க.‘எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட் கிளவி இலவாம் அவைதாம் தத்தம் குறிப்பின் எச்சம் செப்பும்’ என்றது, அவ்வத் தொடருக்குத் தாம் எச்சமாய் வந்து அவற்றது அவாய் நிலையை நீக்கலின், பெயரெச்சம் முதலாயின போலத் தம்மைமுடிக்கும் பிறசொல்லைத் தாம் அவாய் நில்லா; அவை பிறசொல்லாகத் தாம் எச்சமாய் நிற்கும் ஆகலின் என்பதாம். இவற்றிற்கு எடுத்துக்காட்டுக்கள் தருதும், அவற்றுள் சொல்லெச்சத்திற்கு எடுத்துக்காட்டு முன்னர்த் தருதும். |