வடசொற் புணர்ச்சி வடமொழி மரபுபற்றித் தமிழ் வழங்குவதும், தமிழ்மரபுக்கேற்ப அமைந்து வழங்குவதும் என இருநிலையில் காணப்படுகிறது. தமிழில் அருகியே வழங்கும் வடமொழிச் சொற்புணர்ச்சியை விரித்துக் கூறுவது சுருக்க நூலாகிய இதற்குப் பெரும்பயன் இன்று என்று இவ்வாசிரியர் கொண்ட கருத்தைமுற்ற ஏலாது, தமிழ்மொழிப் புணர்ச்சிக்கும் வடமொழிப் புணர்ச்சிக்குத் தாம் பின்பற்றிய முறையையே இவர் பின்பற்றி யிருத்தல் வேண்டும் என்று கூறுதற்கண் உள்ள பொருத்தமின்மையை நோக்குக. |