பிரயோகவிவேகநூலாரும் தம் 11ஆம் நூற்பா உரையைச் சுட்டினார். இவ்வெடுத்துக்காட்டுக்களை மயிலைநாதரும் தந்துள்ளார். (நன்.399) நேமிநாதஉரையாசிரியரும் இக்கருத்தினரே. நன்னூல் விருத்தியாசிரியர் இம்மாடுயான் கொண்டது- இவ்வெழுத்து யான் எழுதியது- இவ்வெழுத்தாணி யான் எழுதியது- இவ்வீடு யான் வாங்கியது- இத்தொழில் யான் செய்தது- இந்நாள் யான் பிறந்தது- என எடுத்துக்காட்டுக்கள் தந்து, “இல்லம் மெழுகிற்று என்பதொரு வழக்கு இன்மையானும், எழுத்தாணிக்கு எழுதுதல் தொழிலாகலானும் அவை எடுத்துக்காட்டாகா” என்று கூறியுள்ளார். (நன்-400 விருத்தி) |