‘இந்நாழிக்கு.............பெரிது’ என்பது ‘உரையிடத்து இயலும் உடனிலை அறிதல்’ (தொல்.சொல்.458) என்பதனான் முடிந்தது. வடுகக்கண்ணன்- வடுகங்கண்ணன்- என்பன |
| ‘வல்லொற்று வரினே இடத்தொகை ஆகும் மெல்லொற்று வரினே பெயர்த்தொகை ஆகும்’
|
நன்.371, மு.வீ.ஒ.103 |
என்பதனான் அமைந்தன. ‘இவன்................களிற்றுமிசையோன்’ என முன்னிலைப் படர்க்கையாகிப் படர்க்கை வினையொடு முடிந்தது. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி எல்லாம் பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது சொல்வரைந்து அறியப் பிரித்தனர் காட்டல்.’
‘மொழிந்த மொழிப்பகுதிக் கண்ணே மொழியாது ஒழிந்தனவும் சார்த்தி உரை.’ |
தொல்.சொல்.463 நன். 461
நே.சொல்.71 |
என்னும் புறப்பாட்டினுள் இவன் என்பது முன்னிலைப் படர்க்கையாய் நிற்றலும், இன்னோரன்ன பிறவும் இப்புறனடை யானே அமைத்துக்கொள்க என்பதாம். 78 |
சொல்லதிகாரம் உரைவிளக்கம்
முற்றும். |