இயைந்தவழித் தன்மையான் முடிந்தாற் போல, அவனும் நீயும் சென்மின் எனவும், ‘ஒண்டூவி நாராய்நின் சேவலும் நீயுமாய் வண்டுஊதும் பூங்கானல் வைகலும் சேறீரால்’ எனவும்,
படர்க்கைச்சொல் முன்னிலையோடு இயைந்தவழி முன்னிலை யான் முடிதலும்,
இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிதுஎன உடன் நிற்கற்பால அல்லாத சிறுபான்மையும் பெரும்பான்மையும் உடன் நிற்றலும், வடுகக் கண்ணன் என வல்லொற்று அடுத்தவழி வடுகநாட்டில் பிறந்த கண்ணன் எனவும், வடுகங்கண்ணன் என மெல்லொற்று அடுத்தவழி வடுகற்கு மகனாகிய கண்ணன் எனவும் பொருள்படுதலும், |
| ‘ஈகார கொடுஎன மூன்றும் முறையே இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புஉரை’ | நன்.407 |
ஆதற்கு உரிய மரபின் ஆகலும், |
| ‘இவன்யார் என்குவை ஆயின் இவனே’ | புறநா.13 |
என்னும் புறப்பாட்டினுள் இவன் என்பது முன்னிலைப் படர்க்கையாய் நிற்றலும், இன்னோரன்ன பிறவும் இப்புறனடை யானே அமைத்துக்கொள்க என்பதாம். 78 |
ஐந்தாவது பொதுவியல் முற்றிற்று. இரண்டாவது சொல்லதிகாரம் முற்றிற்று, |
விளக்கம் |
இவளும் நீயும் சென்மின் ‘முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை’ (நன்.334) என்பதனான் அமைந்தது. ஒண்டூவி.................சேறீரால்’ என்பதும் அது. |