இஃது அதிகாரப் புறனடை கூறுகின்றது. இ-ள்: சொற்கள் தோறும் ‘இத்தன்மையை உடைத்து இச்சொல்லினது இயல்பு’ என்று அவை முழுதும் எஞ்சாமல் தனித்தனியே எடுத்து இலக்கணம் கூறத்தொடங்கின் என்று காண்டல் அரிது ஆகலின், ஈண்டு இலக்கணம் கூறிப் போந்த சொற்களது இயல்பானே இலக்கணம் கூறாத சொற்களையும் ஒப்ப நோக்கி விளங்கி அறிதல் துணிவுடையோர் உடன் என்றவாறு. வரலாறு: யானும் நீயும் அவனும் செல்வேம் என இடத்திற்கு உரிய சொற்களும் தன்மையொடு |