363 | ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை மாற்றியோ ரடியுள் வழங்கன்மொழி மாற்றே | 413 |
| |
364 | பெயரும் வினையுமாஞ் சொல்லையும் பொருளையும் வேறு நிரனிறீஇ முறையினு மெதிரினு நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே | 414 |
| |
365 | எழுவா யிறுதி நிலைமொழி தம்முள் பொருனோக் குடையது பூட்டுவில் லாகும் | 415 |
| |
366 | இடைநிலை மொழியே யேனையீ ரிடத்து நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை | 416 |
| |
367 | செய்யு ளிறுதி மொழிபிடை முதலினு மெய்திய பொருள்கோ ளளைமறி பாப்பே | 417 |
| |
368 | யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை யேற்புழி யிசைப்பது கொண்டு கூட்டே | 418 |
| |
372 | சொற்றொறு மிற்றிதன் பெற்றியென் றனைத்து முற்ற மொழிகுறின் முடிவில வாகலிற் சொற்றவற் றியலான் மற்றைய பிறவுந் தெற்றென உணர்த றெள்ளியோர் கடனே | 461 |