இது முற்கூறிய வினைச்சொல் அங்ஙனம் தோன்றுங் கால் இம்முதல்நிலை அடியாகத் தோன்றும் என்கின்றது. இ-ள்: மேல் எழுத்துஓத்துள் கூறிய முதல்நிலைகளான் இத் தன்மையை உடைய வினைச்சொல் பிறத்தலை உடைத்தாம் என்றவாறு. முதல்நிலைகளாவன: நட-வா- முதலாயினவும், நடப்பி-வருவி- முதலாயினவும், பொருள்- இடம்- காலம் முதலாயினவும், பிறவும் ஆம். இத்தன்மை என்றது வேற்றுமை கொள்ளாமை முதலிய தன்மை. |