பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-15329

விளக்கம்
 

செய்யும் என்னும் முற்று என்பது படர்க்கை இடத்திலேயே பலர்பால் ஒழிந்த
 ஏனைப்பாற்கண்வரும் என்றவாறு.

பிற்காலத்தில் நீர் உண்ணும் எனவரும் உம் ஈற்றுச் சொல் உம் விகுதிபெற்ற
முன்னிலைப்பன்மை முற்றாம் என்பது அறிக. உம் விகுதியினை நச்சினார்க்கினியர்
தொல்.சொல். 226 ஆம் நூற்பா உரையுள் குறிப்பிட்டுள்ளார்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை
அவ்வயின் மூன்றும் நிகழும் காலத்துச்
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா’,

முழுதும் நன்.348,

‘செய்யும் என் முற்றே சேரும் பலர்ஒழி
மற்றைப் படர்க்கை ......
பலவின்பால் கள்எனப் பற்றி மிகலும் ஆம்.’
 



தொல்.சொல். 227
மு.வீ.வி.28



தொ.வி. 107

பெயரெச்சமும் வினையெச்சமும்
 

242 பெயர்எஞ்சு கிளவியும் வினைஎஞ்சு கிளவியும்
தேருங்கால் ஐம்பால்மூ விடத்தன அவைதாம்
பிறிதொடுஇயைந் தல்லது நிற்றல் ஆற்றாது
குறைபட நிலைஇயும் கொள்கைய என்ப.
 
 

இது பெயரெச்ச வினைஎச்சங்கட்குப் பால்இட உரிமையும் முற்றொடு அவற்றிடை
வேறுபாடும் கூறுகின்றது.

இ-ள்: பெயரெச்சமாகிய வினை வினைக்குறிப்புச் சொல்லும் வினையெச்சமாகிய
வினை வினைக்குறிப்புச் சொல்லும்