பக்கம் எண் :

330 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஆராயும் இடத்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியவாம்; அங்ஙனம் உரியன ஆகிய எச்சங்கள் தாம் பிறிது ஒரு சொல் பற்றி அல்லது நிற்றல் ஆற்றாது குறைபட நிற்கும் கோட்பாட்டினை உடையனவாம் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

மற்றுச்சொல் நோக்குதலான், மற்றுச்சொல் நோக்கா முற்றுச்சொல்லின் வேறுபட்டு
எச்சமாய் நிற்கும் என்பார் ‘குறைபட நிலைஇயும்’ என்றார். எனவே, பெயரொடு இயைந்து
அல்லது நிற்றல் ஆற்றாத எச்சச்சொல் பெயர் எஞ்சுகிளவி எனவும், வினையொடு
இயைந்து அல்லது நிற்றல் ஆற்றாத எச்சச்சொல் வினைஎஞ்சு கிளவி எனவும் விரியும்
என்பதூஉம் ஆயிற்று,

வரலாறு: அவன் உண்ட ஊண்- அவன் உண்டஊண்- அவர் உண்ட ஊண்- அது
உண்டஊண்- அவைஉண்டஊண்- யான் உண்டஊண்- யாம் உண்டஊண்-
நீஉண்டஊண்- நீயிர்உண்டஊண்- எனவும், அவன் உண்கின்ற ஊண்- அவள்
உண்கின்றஊண்- அவர்உண்கின்றஊண்- அதுஉண்கின்ற ஊண்- அவைஉண்கின்றஊண்-
யான்உண்கின்றஊண்- யாம்உண்கின்றஊண்- நீஉண்கின்றஊண்- நீயிர்உண்கின்றஊண்-
எனவும், அவன்உண்ணும்ஊண்- அவள் உண்ணும்ஊண்- அவர்உண்ணும்ஊண்-
அதுஉண்ணும் ஊண்- அவை உண்ணும்ஊண்- யான்உண்ணும்ஊண்- யாம்
உண்ணும்ஊண்- நீ உண்ணும்ஊண்- நீயிர்உண்ணும் ஊண் எனவும்,

உண்டுவந்தான்- வந்தாள்- வந்தார்- வந்தது- வந்தன- வந்தேன்- வந்தேம்-
வந்தாய்- வந்தீர்- எனவும் பெயரெச்சமும் வினையெச்சமும் முறையானே பெயரொடும்
வினையொடும் இயைந்து ஐம்பால் மூவிடங்களுக்கும் உரிய ஆயினவாறு காண்க. 16