வினைப்பொருளும் காலப்பொருளும் செயப்படுபொருளும் ஆகிய பொருட்பகுதி ஆறனையும் பற்றிவரும் பெயர்ச்சொற்களொடு முடிந்தவாறு காண்க. இவற்றிற்குச் செய்யாநின்ற எனவும் செய்யாநிற்கும் எனவும் வரும் வாய்பாட்டு வேற்றுமை ஒன்றென முடித்தலான் கொள்க.‘முடியும்’ என்னாது ‘முடியும் முறையது’ என்ற மிகையானே. அவன் உண்டஊண் என்றாற்போல வினைமுதற் பொருட்பெயர் முன்வந்தே ஏனைய பின் வரும் எனவும், வினைமுதற்பொருள் பெயர் ஆயின் ஆடிய கூத்தன் என்றாற் போல அப்பெயர் பின்வரும் எனவும் கொள்க. |
| ‘மற்றிந்நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்தொடி’ | கலி-60 |
என்புழி, தீர்தற்கு ஏதுவாகிய மருந்து என்னும் ஏதுப் பொருண்மை கருவிக்கண் அடங்கும். |
| ‘தேரொடு புறங் காணேன் ஆயின் சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக.’ | புறம்-71 |
| ‘நிலம்பூத்த மரம்மிசை நிமிர்புஆலும் குயில் எள்ள’ | கலி- 27 |
என்பன போல்வனவும் அன்ன. |
| ‘நின்முகம் காணும் மருந்தினேன்’ | கலி.60 |
என்புழிக் காட்சியை மருந்து என்றது ஆதலின் காணும் மருந்து என்பதூஉம், |
| ‘நின்முகம் காணும் மருந்தினேன்’ | கலி.60 |
என்புழிப் பொச்சாவாமையைக் கருவி என்றார் ஆகலின் பொச்சாவாக்கருவி என்பதூஉம் வினைக்கண் அடங்கும் ஆறுசென்ற வியர் என்புழி, வியர் ஆறு சேறலான் வந்த காரியம் ஆகலின் செயப்படு பொருட்கண் அடங்கும். |