| ‘ஆர்களிறு மிதித்த நீர்’ | குறுந்.52 |
எள்ளாட்டிய எண்ணெய், உண்ட எச்சில் என்பன போல்வனவும் அன்ன. நூற்ற நூலான் இயன்ற கலிங்கம்- பூத்தபூவான் இயன்றகண்ணி- என்பனவும் ஒற்றுமை நயத்தானே, நூற்ற கலிங்கம்- |
| ‘குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி’ | முருகு. 199 |
எனப் பொருட்பெயர் கொண்டனவேயாம். |
| ‘நூலாக்கலிங்கம் வாலரைக்கொளீஇ’ | பதிற். 12 |
என்பது பெயர் எச்ச எதிர்மறை. இதுவும் அவ்வியல்பிற்று. உம்மையை எச்ச உம்மை ஆக்கிச்செய்வது ஆதி ஆறு பொருட்பெயருமே அன்றி, அரசன் ஆகொடுத்த பார்ப்பான்- கொடுக்கின்ற பார்ப்பான்- கொடுக்கும் பார்ப்பான்- எனவும் ஆடை ஒலித்தகூலி- ஒலிக்கின்ற கூலி ஒலிக்கும் கூலி எனவும் ஒத்த உரிமையன அன்றிச் சிறுபான்மை இன்னதற்காக- இது பயனாக- என்பன பற்றி வரும் பெயரும் கொள்க. இன்னும் பழம் உதிர்ந்தகோடு- உதிர்கின்ற கோடு உதிருங்கோடு எனச் சிறுபான்மை தீர்தல் பொருண்மை பற்றிவரும் பெயரும் கொள்க. இனிச் செய்த என்பதன் குறிப்பாய், இன்ன-அன்ன என்ன- கரிய- செய்ய- பெரிய என வருவனவும் காண்க. |
| ‘இன்ன தன்மையின் அருமையின்’ | சீவக. 2754 |
எனவும் |
| ‘அன்னதன்மையின் அறிந்துஈயார்’ | புறம். 136 |
எனவும், |
| ‘என்ன கிளவியும் பண்பின்தொகையே’ | தொல்.சொல்.416 |
எனவும், |