எய்தியது- சென்ற நூற்பாச் செய்தி. சிறப்புவிதி- வகையும், முடிக்குஞ்சொல் பாகுபாடும். தொழில்முதல்நிலை எட்டு- வினை, செய்வது, செயப்படுபொருள், நிலம், காலம், கருவி, இன்னதற்கு, இது பயன் என்பன. (இ.வி.226) ஆடிய கூத்தன், ஆடுகின்ற கூத்தன், ஓதும்பார்ப்பான் - செய்வது. வென்றவேல், வெல்கின்றவேல், வனையுங்கோல்கருவி, புக்கஇல், புகுகின்ற இல், வாழும்இல்- நிலன். போயினபோக்கு, போகின்றபோக்கு, உண்ணும் ஊண்- வினை. வந்தநாள், வருகின்றநாள், துயிலுங்காலம்- காலம். உண்டசோறு, உண்கின்றசோறு, கற்கும்நூல்- செயப்படுபொருள். தொல்காப்பியனாரின் முறை நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற்கிளவியும் வினையும் என்பன; நன்னூலார் முறை செய்பவன்- கருவி- நிலம்- செயல்-காலம்- செய்பொருள்- என்பன. இவர் தொல்காப்பியனாரை ஒட்டிப்பெயரியலில் நூற்பாயாத்து, ஈண்டு நன்னூலாரை ஒட்டி எடுத்துக்காட்டுக்களை . |