பக்கம் எண் :

336 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

முறையாகத் தந்துள்ளார். எதிர்காலம் வாய்பாடு பற்றி எடுத்துக்காட்டுக்களைச் சற்று
மாற்றித் தந்துள்ளதன்கண் சிறப்பு ஏதும் இன்று. புகுகின்ற இது முதலியவற்றைப்
புகாநின்றஇல் முதலியனவாகவும், ஓதும் பார்ப்பான் முதலியவற்றை ஓதா நிற்கும்
பார்ப்பான் முதலியனவாகவும், வாய்பாடு யேறுபடுத்து இவ் விகற்பங்களை ஒட்டிக்கொள்க.
கருவி- நிலம்- செயல்- காலம்- செயப்படுபொருள்- இவை முடிக்குஞ்சொல் ஆகியவழி,
எழுவாய் அவன்வென்ற வேல் என்றாற்போலப் பெயரெச்சத்தின் முன்னர் வருதல்
வேண்டும். பெயரெச்சம் எழுவாயைக் கொண்டு முடியும்வழி ஆடிய கூத்தன்
என்றாற்போல அப்பெயர் பின்னேயே வரும் என்பது.

நோய் தீரும் மருந்து- தீரும் என்பது மருந்து என்ற கருவிப்பெயர் கொண்டு
முடிந்தது; என்னை? நோய்தீருவதற்கு ஏதுவாகிய மருந்து கருவிக்கண் அடங்குதலின்
என்க.

சிறந்தஇவன்- சிறந்த என்ற பெயரெச்சம் இவள் என்ற கருவிப்பெயர் கொண்டது.
என்னை? அவன் சிறத்தற்கு ஏதுவாகிய இவள் கருவிக்கண் அடங்குதலின் என்க.
(தேரோடும் புறங்காணேன் ஆயின் என்’ என்று பாடத்திலுள்ளது)

நிலம் பூத்தமரம்- பூத்த என்பது மரம் என்னும் கருவிப் பெயர் கொண்டது.
என்னை? நிலம் பொலிவு பெறுதற்குக் காரணமாகிய மரம் கருவிக்கண் அடங்குதலின்
என்க.

காணும் மருந்து - காணும் காட்சியாகிய மருந்து என்று பொருள்படுதலின் காணும்
என்பது வினையைக் கொண்டு முடிந்ததாகக் கொள்ளப்படும். வினை- செயல். இது
சேனாவரையர் கருத்து. (தொல்.சொல். 234)