பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-18341

‘ஆன்போம் புழை’
என- வாவும்புரவி- போகும்புழை- என்பன உயிர்மெய்கெட்டு நின்றன. மகர ஒற்று
நிற்றலான் இவை வினைத்தொகை ஆகா என்க.
 



 

‘தெண்கடல்திரை மிசைப்பாயுந்து’
‘நீர்க்கோழி கூப்பெயர்க்குந்து’
புறம்.24
புறம்.395

எனப் பாயும்-பெயர்க்கும்- என்பன உம் ஈறு உந்தாய்த்திரிந்தன,
 

  ‘சாரல் நாடஎன் தோழியும் கலுழ்மே’
‘அம்பல் ஊரும் அவனொடு மொழிமே’
 

குறுந்.51
 
என முறையே கலுழுமே-மொழியுமே- என்பன ஈற்றுயிர் கெட்டும் ஈற்று
உயிர்மெய்கெட்டும் நின்றன, பிறவும் அன்ன,

இனிப் ‘பிற’ என்றதனான், செய்யும் என்னும் உம் ஈற்று முன்னிலைப் பன்மை
முற்றும் இவ்வாறு கெடுதலும் கொள்க.
 

  ‘மாமறை மாக்கள் வருகுலம் கேண்மே’
‘முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ’
 
மணிமே. 13-93
13-56
என முறையே கேளுமோ உரையுமோ என்பன ஈற்று உயிர் கெட்டும் ஈற்று உயிர்மெய்
கெட்டும் நின்றன. மகர ஈறு,
 
  ‘மவ்வீறு ஒற்று அழிந்து உயிர்ஈறு ஒப்பவும்’ 129
என்பதனால் கெட்டது. இவை மணிமேகலையுள் கண்டன.18
 

விளக்கம்
 

எய்தாதது- ஈற்று உயிர்மெய் கெடுதல், உம் உந்தாகத் திரிதல், முற்றின்கண்
உயிரும் உயிர்மெய்யும் நீங்குதல் என்பன.