இது செய்யும் என்னும் வாய்பாட்டான்வரும் உம்ஈற்றுப் பெயரெச்சத்திற்கும் முற்றிற்கும் எய்தாதது எய்துவிக்கின்றது. இ-ள்: செய்யும் என் பெயர்எச்சத்து இறுதி உயிர்மெய் கெடுதலும், செய்யுளிடத்து உம்ஈறு உந்து எனத்திரிதலும் முற்றாமாயின் ஈற்று உயிர் கெடுதலும், ஈற்று உயிர்மெய் கெடுதலும் ஆகிய இவ்விதிகள் பெறுதலும் பிறவும் ஆம் என்றவாறு. உம்மையால் பெறுதல் ஒருதலை அன்ற எனக் கொள்க. ‘வாம் புரவி வழுதியொடு எம்மிடை’ யா.வி.உரை.மேற். |