பக்கம் எண் :

வினையியல்-நூற்பா-17339

சூறாவளி
 

  ஆறு சென்ற வியர்- உண்ட எச்சில்- என்றாற்போல்வன செயப்படு பொருட்கண்
அடங்கும் என்றார்.

  ‘மற்றிந்நோய் தீரும் மருந்து அருளாய்’ என்புழிக் கருவிக்கண் அடங்கும் என்ற
மருந்து மருந்தான் நோய் தீர்ந்தது எனக் கருவிப் பொருண்மைக்கு உரிய மூன்றன் உருபு
ஏற்று நிற்குமாறுபோல, வியர் முதலிய பொருண்மைக்கு உரிய இரண்டன் உருபு ஏற்று
நில்லாமையால் செயப்படுபொருட்கண் அடங்குமாறு யாண்டையது என்க.
 

அமைதி
 

  ஆறு சென்றவியர் என்புழி வியர் ஆறு சேறலான் வந்த காரியம் ஆதலின்
செயப்படுபொருட்கண் அடங்கும் என்ற சேனாவரையர் (தொல்.சொல். 234) விளக்கம்
நோக்கி அறிக. வியர் செயப்படுபொருள் என்றார் அல்லர்; செயப்படு பொருட்கண்
அடங்கும் என்றே கூறினார் ஆதலும் உணர்க. உண்ட எச்சில் என்புழி எச்சில்
உண்டதனால் வந்த காரியம் ஆதலின் அதனையும் செயப்படுபொருள் என்னாது,
செயப்படு பொருட்கண் அடக்கியவாறும் காண்க. அவை இரண்டன் உருபு ஏற்கும்
நிலையவாயின் செயப்படு பொருள் என்றே கூறியிருப்பார் என்பதும் கொள்க.
செயப்படுபொருளை விடுத்து வேறு எதன்கண் அடங்கும் என இவற்றை முனிவர்
சுட்டுதல் இயலாமையும் நோக்குக, ஆறு சென்ற வியரை உடையன், உண்ட
எச்சிலையுடையன் என விரிப்பின், இவை செயப்படு பொருளாமாறும் காண்க.
 

ஒத்த நூற்பாக்கள்
 

  ‘நிலமும் பொருளும் காலமும் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட
அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய
செய்யும் செய்த என்னும் சொல்லே.’




தொல்.சொல்.234