| ‘கொல்வான் கொடித்தானை கொண்டெழுந்தான் | பு.வே.மா.99 |
எனவும் |
| ‘அலைப்பான் பிறிது உயிரை ஆக்கலும் குற்றம்’ | நான்மணி.28 |
எனவும், |
| ‘புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்’ | கார்.நாற்-11 |
எனவும் எதிர்காலம் பற்றி வரும். இனி, இன்ன பிறவாவன: உணற்கு வந்தான் என எதிர்காலம் பற்றி வரும் குகர ஈற்றுச் சொல்லும், நீர் பொய் கூறியபின் மெய் கூறுவார் யார் என இறந்தகாலமும் நீ இவ்வாறு கூறுகின்றபின் உரைப்பது உண்டோ என நிகழ்காலமும் பற்றிவரும் பின் ஈற்றுச்சொல்லும், மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என இறந்தகாலம் பற்றிவரும் முன் ஈற்றுச் சொல்லும், |
| ‘வலனாக வினையென்று வணங்கி நாம் விடுத்தக்கால்’ | கலி.35 |
என இறந்தகாலமும், |
| ‘அகன்றவர் திறத்துஇனி நாடுங்கால்’ | கலி.16 |
என நிகழ்காலமும் பற்றி வரும் கால்ஈற்றுச் சொல்லும், |
| ‘தொடர்கூரத் துவ்வாமை வந்தக்கடை.’ | கலி.22 |
என இறந்தகாலம் பற்றி வரும் கடையீற்றுச் சொல்லும், |
| ‘விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே’ |
கலி.130 |
என இறந்தகாலமும், |