| ‘அவள் ஆடுவழிஆடுவழி அகலேன் மன்னே’ | அகம்.49 |
என நிகழ்காலமும், உரைக்கும் வழி என எதிர்காலமும் பற்றி வரும் வழிஈற்றுச் சொல்லும், |
| ‘களையுநர் கை கொல்லும் காழ்த்த இடத்து’ | குறள்.879 |
என இறந்தகாலமும், உரைக்குமிடத்து என நிகழ்காலமும் எதிர்காலமும் பற்றி வரும்இடத்துஈற்றுச் சொல்லும்- ஆகிய இவ்வறுவகையீற்றுச் சொல்லும் எனக்கொள்க.இன்னும் அதனானே, |
| ‘விருந்து இன்றி உண்ட பகலும்’ | திரிகடு.44 |
எனவரும் இன்றியும், |
| ‘நாளன்றுபோகி’ | புறம்.124 |
எனவரும் அன்றியும், |
| ‘நாணும் நட்பும் இல்லோர்த் தேரின்
யான்அலது இல்லைஇவ் வுலகத் தானே’ | அகம்.268
|
எனவரும் அல்லதும், |
| ‘நுணங்கிய கேள்வியர் அல்லால்’ | குறள்.417 |
| எனவரும் அல்லாலும், | |
| ‘அவாஉண்டேல் உண்டாம் சிறிது’ | குறள்.1075 |
எனவரும் ஏலும், |
| ‘அவன் எள்ளு மேனும் வரும்’ | |
எனவரும் ஏனும்- வினையெச்சக் குறிப்புக்களாம் எனக் கொள்க. |
| ‘ஒன்றானும் தீச்சொல்’ | குறள்.128 |
என்புழி, ஆயினும் என்பது ஆனும் எனக் குறைந்து நின்றது. உண்டான்- உண்டவன்- என்னும் வினைப்பெயர்கள் உண்டாற்கு- உண்டவற்கு- என்ற நான்கன் உருபு ஏற்றுழிச் |