பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-2449

  மழவும் குழவும் இளமைக்கு ஏற்றலும்
கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறத்தலும்
கதழ்வும் துனைவும் விரைவு காட்டலும்
அதிர்வும் விதுப்பும் நடுக்கம் செய்தலும்
கெடவரல் பண்ணை விளையாட்டு உணர்த்தலும்
நம்பும் மேவும் நசையின ஆகலும்
ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாய்தல்
உள்ளதன் நுணுக்கம் உணரக் காட்டலும்
பிணையும் பேணும் பெட்பின ஆகலும்
பையுளும் சிறுமையும் நோய்கூ றுதலும்
வெறுப்பும் உறப்பும் செறிவினை விளம்பலும்
இலம்பாடு ஒற்கம் வறுமை செப்பலும்
ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தலை உரைத்தலும்
பேம்நாம் உரும்என வரூஉம் கிளவி
ஆமுறை மூன்றும் அச்சம் கூறலும்
கறுப்பும் சிவப்பும் வெகுளி சுட்டலும்
பரவும் பழிச்சும் வழுத்தின்குறிப்பு உணர்த்தலும்
வரன்முறை என்மனார் மரபுஉணர்ந் தோரே.

 


இது நிறுத்த முறையானே குறிப்பு உணர்த்துவனவற்றுள், தாம் பலவாய் நின்று ஒருபொருள் உணர்த்தும் உரிச்சொற்கள் இவை என்கின்றது.
 

  இ-ள் உறுபுனல் தந்துஉலகு ஊட்டி’ நாலடி.185
எனவும்,
 
  ‘ஈயாது வீயும் உயிர்தவப் பலவே.’ புறம்.235
எனவும்,
 
  ‘வந்துநனி, வருந்தினை வாழிய நெஞசே’ அகம். 19

எனவும் உறு எனத் தவஎன நனிஎன வரும் மூன்று உரிச்சொற்களும் மிகுதி என்னும் உரிச்சொல் காட்டும் குறிப்புப் பொருளை உடைய ஆகலும்,