| ‘கடுநட்பு’ | |
எனச்சிறப்பும், |
| ‘கடிஉருமின் உரறிக் கடிப்புச் சேர்பு’ | |
என அச்சமும். |
| ‘கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடுஞ்சூள் தருகுவன் நினக்கே’ | |
எனப் புறத்து அன்றித் தெய்வம் முதலாயினவற்றின் முன் நின்று தெளிவித்தலும் ஆகிய குறிப்பொடு கூடச் சிறுபான்மை. |
| ‘கடுத்தனள் அல்லளோ அன்னை’ | |
என ஐயமாகிய குறிப்பும், |
| ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’ | |
எனக்கரிப்பும், |
| ‘கடிநாறு பூந்துணர்’ | |
என மணமும் ஆகிய பண்பும் உணர்த்தலும் வரலாற்று முறைமை என்று சொல்லுவர் உரிச்சொற்கள் பொருள் உணர்த்தும் முறைமையை உணர்ந்தோர் என்றவாறு. மேல் பண்பு உணர்த்துதற்குத் தோற்றுவாய் செய்வார், கரிப்பும் மணமும் ஆகிய பண்பும் உடன் கூறினார். 3 |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்.’ | தொல்.சொல்.337 |
| ‘விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே.’ | 347 |
| ‘அவற்றுள் விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும்.’ | 348 |
| ‘பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும்.’ | 339 |
| ‘தாவே வலிமை வருத்தமும் ஆகும்.’ | 344மு.வீ.ஒ.42 |
| ‘செழுமை வளனும் கொழுப்பும் ஆகும்.’ | 352 |