பக்கம் எண் :

458 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்’ அகம்.14
எனவும்,
 
  ‘கயிறுஇடு கதச்சேப் போல மதமிக்கு அகம்.36
எனவும், மதவு என்னும் உரிச்சொல் மடனும் வலியும் ஆகிய குறிப்பு உணர்த்தலே
அன்றி
 
  ‘மதவிடை’
 
எனவும்
 
  ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ அகம்.130
எனவும், உள்ள மிகுதியும் வனப்பும் ஆகிய குறிப்பும் சிறு பான்மை உணர்த்தலும்,
 
  கடி என்னும் உரிச்சொல்
‘கடிய கடிந்துஒரார் செய்தார்க்கு’
குறள்.658
என வரைவும்,
 
  ‘கடிநுனைப்பகழி’
 
எனக் கூர்மையும்,
 
  ‘கடிமரம் தடியும் ஓசை’ புறம்.36
எனக் காவலும்,
 
  ‘கடியூண் கடவுட்கு இட்ட செழுங்குரல்’ குறுந்.105
எனப் புதுமையும்,
 
  ‘கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்’ புறம்.15
எனவிரைவும்,
 
  ‘கடும்பகல் ஞாயிறு’ கலி.145
என விளக்கமும்,
 
  ‘கடுங்கால் ஒற்றலின் சுடர்சிறந்து உருத்து’ பதிற்.25
என மிகுதியும்,